Monday, May 10, 2010

பித்தர் பாடல்கள் - 1



சித்தர் பாடல்களை நீங்கள் அனைவரும் படித்திருப்பீர்கள்(?).

அதே மாதிரி பித்தர் பாடல்கள் சிலவற்றை இந்த தளத்தில் தருகிறேன். இந்த பாடல்களில் மறை பொருள் என எதுவும் கிடையாது. இவற்றை உங்கள் வாழ்வில் பயன் படுத்திக் கொண்டாக வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை.

இனி இந்த பாடல் பற்றி பார்ப்போம். ”தேசாப்” என்கிற படத்தில் வந்த அமரத்துவம் வாய்ந்த பாடல் என அந்த காலத்து பித்தர்களின் குறிப்புகள் உள்ளன. ”இரவின் வெறுமை அதன் ஊடே துயரம் சுமக்கும் எளிய மனிதர்கள் ரசிக்கும் பாடலாக இதைக் கொள்ளலாம்” என கோடிக் கணக்கான பித்தர்களில் ஒருவர் என்னிடம் கூறினார்.

முக்கியமாக குறும்படம் பார்க்க விருப்பமில்லாதவர்கள் இதனை பார்க்க கூடாது.

மிக கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டுமே இதை பார்க்க வேண்டும், ஏனெனில் பாடல் காட்சியில் வரும் அனைவரும் முழுமையாக உடை அணிந்து இருக்கிறார்கள். இது உங்களில் சிலருக்கு அருவெறுப்பினை தரலாம்.....அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.

No comments:

Post a Comment